இந்திய திரைப்படங்களை திரையிட விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கிக் கொள்ளப்பட உள்ளதாக பாகிஸ்தான் திரையரங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உரி பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்கியதில் 19 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். இதனால் இரு நாட்டு உறவுகளும் சீர்குலைந்தன. இதனையடுத்து பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கிக் கொள்ளப்பட உள்ளதாக அந்நாட்டின் திரையங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் ஷொராய்ஸ் லஷ்காரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய சினிமா தடையால் தங்கள் வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்திய படங்களை திரையிட இதுவே சரியான நேரம் எனக் கருதுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சிந்திக் நடிப்பில் வெளியாகியுள்ள ஃப்ரீக்கி அலி(FREAKY ALI) திரைப்படம் முதலில் திரையிடப்படும் எனக் கூறிய அவர், அரசின் வரவேற்பு எப்படியுள்ளது என்பதை அறிந்து அமிர்கானின் ‘தங்கல்’ படம் திரையிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்காச்சோளக்காட்டில் சடலமாக கிடந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது
பூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
கந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது
அழகான இரு வெங்காயத் தோடுகள் - மனைவிக்கு அக்ஷய் குமார் தந்த விநோத பரிசு
படிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்