[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

அமெரிக்க நீர்மூழ்கி உளவு விமானத்தை சிறைபிடித்த சீனா

pentagon-asks-china-to-immediately-release-its-naval-vessel

அமெரிக்க ராணுவத்தின் நீர்மூழ்கி உளவு விமானத்தை சீனா சட்டவிரோதமாக சிறைபிடித்திருப்பதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் கூறுகையில், தென்சீனக் கடல்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆளில்லா நீர்மூழ்கி உளவு விமானத்தை சீனா சிறைபிடித்துள்ளது. அமெரிக்க கடற்படைக் கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட அந்த விமானத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சீன அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விதிகளின்படி அந்த ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்க அரசிடம் சீனா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல்பகுதியில் உள்ள தீவில் ராணுவ தளம் அமைத்துள்ள சீனா, அந்த கடல்பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது. அதேநேரம் அந்த கடற்பகுதி தங்களுக்குதான் சொந்தம் என்று வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் உரிமை கோரிவருகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close