[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

ஆப்பிள் நிறுவனத் தலைமையகம் உள்ள கூபெர்டினோ நகர மேயராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு

cupertino-city-of-apple-s-headquarters-gets-an-indian-american-mayor

அமெரிக்காவின் கூபெர்டினோ நகர மேயராக முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூபெர்டினோ நகரம், ஆப்பிள் நிறுவனத் தலைமையகம் அமைந்துள்ளதால் உலக அளவில் பிரபலமானது. அதுமட்டுமல்லாது அமெரிக்காவில் உள்ள சிறுநகரங்களில் கல்விநிலையங்கள் அதிகமுள்ள நகராகவும், படித்தவர்கள் அதிகம் வசிக்கும் நகராகவும் அறியப்படுகிறது. இந்த நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவிதா வைத்யநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூபெர்டினோ நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றுள்ள சவிதா, பள்ளியில் கணித ஆசிரியராகவும், வங்கி அதிகாரியாகவும் பணியாற்றியவர். கூபெர்டினோ நகரில் கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வரும் சவிதாவுக்கு மேயராக அவரது மகள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் சவிதா மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close