[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறும் நடவடிக்கை: அரசின் திட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

britain-to-leave-the-european-union-approved-by-parliament

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அரசு முன்வைத்துள்ள திட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். அதே போல் இது தொடர்பான திட்டத்தை முன்னரே அறிவித்து நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும் என தொழிலாளர் கட்சியினர் முன் வைத்தக் கோரிக்கைக்கும் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தொழிலாளர் கட்சியின் திட்டத்திற்கு ஆதரவாக 448 பேரும், எதிராக 75 பேரும் வாக்களித்தனர். அதே போன்று அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்க ஆதரவாக 461 பேரும், எதிராக 89 பேரும் வாக்களித்தனர். அரசின் திட்டத்தின்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து பி‌ரிட்டன் 2019 ஆம் ஆண்டில் முழுமையாக வெளியேறும். இது தொடர்பாக கடந்த ஜூனில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 51.9 சதவீத மக்கள் பிரிட்டன் ஒன்றியத்தை விட்டு வெளியேற ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close