[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த போலி அமெரிக்க தூதரகம்

fake-us-embassy-in-ghana-shut-down-after-decade-of-issuing-visas

ஆப்பிரிக்க நாடான கானாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்த போலி அமெரிக்க தூதரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கானா தலைநகரான அக்ராவில் கானா மற்றும் துருக்கியில் இருந்து செயல்பட்டுவந்த தீவிரவாத குழுக்கள் நடத்தி வந்த போலி துதரகம் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தூதரகம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சட்டவிரோதமாக பெறப்பட்ட விசாக்களை விற்றுவந்ததும் தெரியவந்துள்ளது. கானாவில் செயல்பட்டு வந்த தூதரகம் அமெரிக்க அரசால் நடத்தப்படவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது கானாவில் செயல்பட்டு வந்த நெதர்லாந்து தூதரகமும் போலி என்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சோதனையின் போது இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் போலி விசாக்கள், செல்போன் மற்றும் லேப்டாப்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கானா காவல்துறை தெரிவித்துள்ளது. போலியான பிறப்பு சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏராளமான சான்றிதழ்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போலி தூதரகத்தில் அமெரிக்க விசா ஒன்று 6,000 அமெரிக்க டாலர்கள் விலையில் விற்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. போலி தூதரகம் செயல்பட்டு வந்த அக்ராவில் அமெரிக்க அரசின் உண்மையான தூதரகமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close