[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தோனேசிய காவல்துறை விமானம் 13 பேருடன் மாயம்

indonesian-police-plane-missing-with-13-on-board

பதிமூன்று பேருடன் சென்ற இந்தோனேசிய காவல்துறை விமானம் சிங்கப்பூருக்கு அருகில் மாயமானது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கூட்டத்தில் உள்ள பங்கா தீவுப்பகுதியில் இருந்து சிங்கப்பூரின் பாட்டம் தீவுக்கு 8 பயணிகள் மற்றும் விமானிகள் 5 பேருடன் காவல்துறை விமானம் ஒன்று இன்று காலை புறப்பட்டது. புறப்பட்ட 50 நிமிடங்களில் தரையிலிருக்கும் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விமான இழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தோனேசியா பேரிடர் மீட்புக் குழுத் தலைவர் ஹென்றி பாம்பாங், காணமல் போன விமானத்தை இந்தியப் பெருங்கடலில் உள்ள மென்ஸனாக் மற்றும் செபாங்கா தீவுகளுக்கு இடையில் தேடும் பணி நடந்து வருவதாகத் தெரிவித்தார். அந்த தீவுக்கூட்டங்களுக்கு அருகில் காணாமல் போன விமானத்தின் சீட், காவல் துறை தொடர்பான ஆவணங்கள் மற்றும் செல்போன்கள் சிலவற்றை அருகிலுள்ள கிராம மக்கள் கண்டெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close