[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

நொறுங்கிய விமானத்தில் இருந்து 6 பேர் உயிருடன் மீட்பு.. கால்பந்து வீரர்களா..?!

colombia-plane-crash-81-passengers-on-chartered-flight-included-brazil-s-chapecoense-football-team

பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஏ பிரிவு கால்பந்து வீரர்கள் உள்பட 81 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் வரும் புதன்கிழமை அன்று மெடலினில் நடைபெறக்கூடிய கோபா கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக பொலியாவில் இருந்து கொலம்பியாவின் மெடலின் விமான நிலையத்துக்கு சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் விபத்திற்குள்ளான விமானத்தில் இருந்து 6 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை என கூறிய அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

6 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளதால் எஞ்சியுள்ளோரும் உயிரோடு இருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டு மீட்புப் பணியில் அதிகாரிகள் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றனர். போதிய எரிபொருள் இல்லாத காரணத்தினாலேயே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close