[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கமல் ஹாசன் முதல்..கவுண்டமணி வரை பிரபலமானது இந்த வார்த்தையால்தான்..!

world-hello-day

ஹலோ டாக்டர் ஹார்ட்டு வீக் ஆச்சே..ஹலோ ஹலோ சுகமா..மாமா நீங்க நலமா?..ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி ..கேள்விக்கு பதிலு என்னாச்சி...இப்படி பல்வேறு விதமான ‘ஹலோ’-க்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

ஆண்டுதோறும் நவம்பர் 21-ஆம் தேதி ‘உலக ஹலோ தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போரை முடிவுக்கு கொண்டுவர, அந்நாட்டு மக்கள் இடையே சண்டையை மறந்து சமாதானம் ஏற்படும் விதமாக 1973 ஆம் ஆண்டில் முதன் முதலாக உலக ஹலோ தினம் கொண்டாடப்பட்டது.

இன்றைக்கு 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினம் கோலாலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள் அனைவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.

இத்தினம் கொண்டாடப்படுவதன் மூலம் சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்தவும், உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்டவும் முடியும் என நம்பப்படுகிறது.

‘ஹலோ’ என்ற சொல்லை நாம் அனைவரும் தினமும் பலமுறை உபயோகிக்கிறோம். இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய “”தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்’’ என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது.

இதற்கு இப்படியான ஒரு வரலாறு இருக்க, ஹலோ என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஹலோ ஹலோ சுகமா பாடலும் ..கமல் ஹாசனின் ஹலோ மை டியர் ராங் நம்பர் பாடலும் தான். அதே போல சூரியன் திரைப்படத்தில் கவுண்டமணியைப் பிரபலமாக்கிய ’ வயர் அறுந்து ஒரு வாரம் ஆச்சி ’ காமெடியை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது .

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close