[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

இன்று உலக சகிப்புத்தன்மை தினம்

world-tolerance-day

சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஐ.நா சபையால் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி சர்வதேச சகிப்புத்தன்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1996-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ம் தேதி உலக சகிப்புத்தன்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது. மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உணர்வுகளுக்கு அடிப்படையாக சகிப்புத்தன்மை நம்மிடம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மனிதர்கள் அனைவரும் வன்முறையின்றி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து நட்புடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், ‘மதன்ஜீத் சிங்’ என்ற விருது யுனெஸ்கோ சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இவ்விருது உலகில் சகிப்புத்தன்மை மேம்படவும், அகிம்சை தழைத்தோங்கவும் பாடுபடும் நிறுவனம், மற்றும் தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

2016-ஆம் ஆண்டுக்கான விருது ரஷ்யாவின் மத்திய ஆராய்ச்சி மற்றும் செயல்முறை மையத்தின் கல்வி மற்றும் உளவியல் பிரிவுக்கு வழங்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close