[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

பாம்பை திருமணம் செய்த தாய்லாந்து இளைஞர்

man-marries-snake-he-believes-is-his-dead-girlfriend

தாய்லாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பாம்பை திருமணம் செய்துள்ளார்.

மறைந்த தனது காதலி பாம்பு வடிவில் மறுபிறவி எடுத்துள்ளதாக நம்பும் அவர், பாம்புடன் கேரம் விளையாடுவது உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதர்கள், தங்களது அடுத்த பிறவியில் விலங்குகளாக பிறப்பர் என்று தாய்லாந்தில் வாழும் புத்த மதத்தினர் நம்புகின்றனர். அதன்படி, சுமார் 10 அடி நீளமுள்ள நாகபாம்பு வடிவில் காதலி மறுபிறவி எடுத்துள்ளதாக அந்த இளைஞர் நம்புகிறார். உடற்பயிற்சிக் கூடம், மார்க்கெட் என எங்கு சென்றாலும், பாம்பையும் கூடவே எடுத்துச் செல்லும் அந்த இளைஞருக்கு மனதளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மனநல மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாம்பைத் திருமணம் செய்துகொண்ட இளைஞர் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளிவரவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close