[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

முதியோர் இல்லத்தில் தவிக்கும் அம்மாக்களுக்கு லட்சம் டெபாசிட் செய்யும் மகன்கள்..!

sons-who-left-their-mothers-at-old-age-homes-are-depositing-two-and-a-half-lakh-rupees-in-their-moth

தாய்மார்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்த்தவர்கள் கூட தற்போது அவர்களின் பெயரில் இரண்டரை லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து வருகின்றனர் என்று ஜப்பானில் பிரதமர் மோடி சிரித்து கொண்டே பேசியுள்ளார்.

ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள கோபே நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நேற்று (சனிக்கிழமை) கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், ‘இந்தியாவில் பெருமளவில் கருப்புப் பணம் புழக்கத்தில் உள்ளது. மேலும், பயங்கரவாதிகளும் கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டிருப்பதும் தெரியவந்தது. இதனை வளரவிட்டால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டுதான், இந்தியாவில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது என கூறினார்.

இந்த திட்டத்திற்கு வரவேற்புகளும், பாராட்டுகளும் வரும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள டிசம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இதனால் தங்களிடம் உள்ள ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யும் வேலையில் பலரும் இறங்கியுள்ளனர்.

இந்த அதிரடி அறிவிப்பினால் தாய்மார்கள் மீது அக்கறையின்றி, முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்த்தவர்கள் கூட தற்போது பணத்தை மாற்றிக்கொள்ள அவர்களது தாயார் பெயரில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்வது மகிழ்ச்சியாகவே உள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் இந்திய குடிமகன்களை வாழ்த்துகிறேன்’ என்றும் மோடி கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close