[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

பாகிஸ்தானில் பழிக்கு பழியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்

woman-raped-on-panchayat-orders-in-pakistan-commits-suicide

பாகிஸ்தானில் பழிக்கு பழியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் அப்பாவை, வன்கொடுமை செய்தவரின் மகளை பழிக்குப் பழியாக பாலியல் வன்கொடுமை செய்ய அங்குள்ள பஞ்சாயத்து உத்ததரவிட்டுள்ளது.

இதனால் அவரும் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்தவரின், மகளை பழிக்குப் பழியாக வன்கொடுமை செய்துள்ளார். இப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. தற்போது கர்ப்பமாக இருக்கும் இப்பெண் இந்த பாலியல் வன்கொடுமை வேதனையால் தன்னை தீயிட்டு கொளுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர் இதுகுறித்த புகாரை காவல்துறையிடனம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கு கிடைக்க வேண்டிய நீதியை அல்லா தருவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close