[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

எப்படி சாத்தியமானது ட்ரம்பின் சாதனை வெற்றி...

10-point-guide-to-donald-trump-s-surprise-win

அமெரிக்க அதிபர் தேர்தலில் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 

* வெற்றிக்குப் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன் என்று உறுதியளித்தார். மேலும், அமெரிக்காவுக்கு ஹிலாரி ஆற்றிய பணிகளுக்காக நன்றி தெரிவிப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

* ரியல் எஸ்டேட் அதிபரான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக ஹிலாரியைத் தேர்வு செய்ய முனைப்பு காட்டிய தற்போதைய வெள்ளை மாளிகைவாசிகளின் கனவைக் கலைத்தார் என்றே கூறலாம். 

* இழுபறி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட முக்கிய மாகாணங்களில் ட்ரம்பின் கை ஓங்கியதே, அவரது வெற்றிக்குத் தேவையான 270 வாக்குகளைப் பெற உதவியதாக தி அசோசியேட் பிரஸ் மற்றும் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி ஆகியன தெரிவித்துள்ளன. 

* பலத்த கரகோஷங்களிடையே தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ட்ர்ம்ப், தனது வெற்றிக்கு தொலைபேசி மூலம் ஹிலாரி வாழ்த்துத் தெரிவித்ததாகத் தெரிவித்தார். 

* கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ட்ரம்ப் வெற்றிபெற காரணம், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் எனும் அவரது வாக்குறுதியே என்று கணிக்கப்படுகிறது. இந்த ஒரு வாக்குறுதியாலேயே நடுத்தர மற்றும் அடித்தட்டு வர்க்க மக்களின் வாக்குகளை அவர் மொத்தமாக ஈர்த்தார் என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

* 70 வயதான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக முதன்முறையாக அதிக வயதில் பதவியேற்பவர் எனும் சாதனைக்குச் சொந்தக்காரராகிறார். அமெரிக்காவின் 45ஆவது அதிபராக 2017ம் ஆண்டு ஜனவரி 20ல் அவர் பதவியேற்பார். 

* அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் என்ற கொள்கையை முன்னிறுத்தி பரப்புரை செய்த ட்ரம்ப், தனது ஆளுமை,வர்த்தகத் திறன் போன்றவற்றால் அதனை சாதிப்பேன் என்றும் உறுதியளித்திருந்தார். மேலும், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவுக்குள்  நுழையத் தடை விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் சூளுரைத்தார். 

* சீனாவுடனான பொருளாதார போட்டிகளை வெல்லவும், சட்டவிரோத அகதிகள் நுழைவைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மெக்சிகோ எல்லையில் மிகப்பெரிய சுவரை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். 

* ஹிலாரியுடனான 3 நேரடி விவாதங்களிலும் தோற்றவராகக் கணிக்கப்பட்ட ட்ரம்ப், அதிபர் தேர்தலில் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக வெளியான வீடியோ பதிவில் பெண்கள் தொடர்பான மோசமான விமர்சனங்களை ட்ரம்ப் பேசுவது போல இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை அடுத்த சில நாட்களில் ட்ரம்ப் மறுத்தநிலையில், பெண்கள் பலர் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.      

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close