[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தல்.. கட்சிகளின் சின்னங்கள் உருவான சுவாரஸ்ய பின்னணி

us-election-details-about-symbols

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனல்ட் ட்ரம்ப் வென்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் தோல்வியைத் தழுவினார்.

குடியரசுக்கட்சியின் சின்னமாக யானையும், ஜனநாயகக் கட்சியின் சின்னமாக கழுதையும் இருக்கிறது. இந்த தருணத்தில் இருபெரும் கட்சிகளின் சின்னங்களான யானை மற்றும் கழுதை உருவாகியதன் பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவல்களைக் காண்போம்.

கடந்த 1828ம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரையின் போது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆன்ட்ரூ ஜாக்சனை, அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ‘கழுதை’ என விமர்சித்தார். இந்த விமர்சனத்தை வரவேற்கும் விதமாக ஜாக்சன் தன் சின்னமாக கழுதையை வைத்துகொண்டு, அதில் வெற்றியும் பெற்றார். பின் இந்த சின்னத்தை தாமஸ் நாஸ்ட் என்பவர் அமெரிக்க நாளிதழில் கார்ட்டூன் படமாக வரைந்து விளம்பரப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, தாமஸ் நாஸ்ட் குடியரசு கட்சி சின்னமான யானையை, 1874- இல் ஹார்பெர்ஸ் வீக்லி நாளிதழில் கார்ட்டூன் வரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தினார். அதில் யானை, சிங்க தோல் போர்த்திய கழுதையை எடுத்தெறிவது போலவும், மற்ற விலங்குகள் இதை பயத்துடன் கண்டு மிரளுவது போலவும் காணப்பட்டது. குறிப்பாக, அந்த வரைப்படத்தில் யானை மீது, ‘குடியரசு ஓட்டு’ என எழுத்தப்பட்டிருந்தது. கழுதையை தொடர்ந்து இந்த யானை சின்னமும் மக்களிடையே பிரபலமானது. அன்றிலிருந்து இன்று வரை குடியரசு கட்சியின் சின்னமாக யானையும், ஜனநாயக கட்சியின் சின்னமாக கழுதையும் இருந்து வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close