[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக தேர்வானார் டொனால்டு ட்ரம்ப்

us-election-live-donald-trump-wins-us-election

எந்தவித அரசியல் பின்புலம் இல்லாத டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்குள் முன்னனி நிலவரம் வெளியாகி வந்தது. ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த ஹிலரி, அதன் பின்பு பின்னடைவை சந்தித்தார். மொத்தம் உள்ள 538 வாக்குகளில். வெற்றி பெறுவதற்கு 270 வாக்குகள் வேண்டும் என்கிற நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் 276 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரிக்கு 218 வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் மூலம் ட்ரம்ப் அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வாகியுள்ளார்.

முக்கிய மாகாணங்களான புளோரிடா, ஓஹியோ, வடக்கு கரோலினா என 20க்கும் அதிகமான மாகாணங்களை ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார். ஹிலரி கிளிண்டன் கலிபோர்னியா, விர்ஜினியா உள்ளிட்ட 15க்கும் அதிகமான மாகாணங்களை வசப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் , ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20 தேதி பொறுப்பேற்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close