[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலரி முன்னிலை

us-election-hilary-presence

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி மாலை 4 மணி அளவில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் தொடங்குகிறது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளின்டன் கருத்துக்கணிப்புகளில் முன்னிலை பெற்றுள்ளார்.

தேர்தல் தொடர்பாக சிபிஎஸ் நியூஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஹிலரிக்கு 45 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப்பிற்கு 41 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துக்கணிப்பு நவம்பர் 2 முதல் 6 வரையிலான காலகட்டத்தில் தொலைபேசி வாயிலாக நடத்தப்பட்டதாக சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

‌இந்நிலையில் டிக்ஸ்வில்லி நாட்ச்சில் நடந்த பராம்பரிய நள்ளிரவு வாக்குப்பதிவில் ஹிலரி கிளின்டன் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். மொத்தம் எட்டு வாக்களர்கள் மட்டுமே வாக்களித்த நிலையில் ஹிலரிக்கு நான்கு வாக்குகளும், டொனால்டு ட்ரம்பிற்கு இரண்டு வாக்குகளும் கிடைத்துள்ளன. ஒரு வாக்கு விடுதலைக் கட்சியைச் சேர்ந்த கேரி ஜான்சனுக்கு கிடைத்த நிலையில், ஒருவர் கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மிட் ரோம்னிக்கு வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கனடா எல்லை மற்றும் மெய்ன் மாகாணங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த நகரில் மற்ற மாகாணங்களில் அதிபர் தேர்தல் தொடங்குவதற்கு முன்பு வாக்குப்பதிவு நடந்து முடிவதோடு முடிவுகளும் அறிவிக்கப்படும். கடந்த 2000, 2004 மற்றும் 2008ஆம் ஆண்டு தேர்தல்களில் இந்த நகரில் வெற்றி பெற்றவர்களே அதிபர்களாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close