[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

ஹிலரியை ஆதரித்து ஒபாமா இறுதிக்கட்ட பரப்புரை

us-election-hilary-supporting-the-obama-campaign

அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் அதிபர் ஒபாமா, ஹிலரியை ஆதரித்து இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார்.

உலக நாடுகள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டனும்,குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் தேர்தலுக்கான இறுதிகட்ட பரப்புரையில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஃபிலடெல்பியா பகுதியில் தற்போது நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அதிபர் ஒபாமா,ஹிலரியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,அணுஆயுதக் கொள்கை விஷயத்தில் டொனால்ட் டிரம்ப்பை நம்ப முடியாது என்றார்.அமெரிக்காவின் பார்வை விரிவடைய வேண்டுமே தவிர சுருங்கக் கூடாது என்பதே தனது விருப்பம் என தெரிவித்த ஒபாமா,மக்களை விரும்பும் ஹிலரி நாட்டின் வளர்சிக்காக தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடியவர் எனக் கூறினார். மேலும், இத்தேர்தல், பிரிவினைக்கும், ஒற்றுமைக்கும் இடையேயான தேர்தல், அனைவருக்குமான வளர்ச்சி - பணக்காரர்களுக்கான வளர்ச்சி என்பதற்கு இடையேயான தேர்தல் என்ற ஒபாமா, அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close