[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

டாலர் தேசத்தின்அடுத்த அதிபர் யார்?... சூடுபிடிக்கும் தேர்தல் களம்

us-presidential-election

சர்வதேச சமூகம் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8ம் தேதி நடக்கிறது.

உலகின் அதிகாரமிக்க பதவியாகக் கருதப்படும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், முக்கிய வேட்பாளர்களாக ஜனநாயக் கட்சியின் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்பும் இருக்கின்றனர். சர்ச்சை நாயகனான ட்ரம்ப்-பை, அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட ஹிலாரி எளிதில் வீழ்த்தி விடுவார் என்றே அரசியல் விமர்சகர்கள் தொடக்கத்தில் கணித்திருந்தனர். ஆனால், ஹிலாரியின் இ-மெயில் சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்களால் ட்ரம்ப்பின் கை ஓங்கத் தொடங்கியது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், என்பிசி-வால் ஸ்ட்ரீட் பத்திரிகை ஆகியவை இணைந்து நடத்திய இறுதி ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், ஹிலாரி கிளின்டனுக்கு 44 சதவீத ஆதரவும், டொனால்ட் ட்ரம்ப்-புக்கு 40 சதவீத ஆதரவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல, இ-மெயில் விவகாரத்தில் ஹிலாரி அலட்சியமாக செயல்பட்டாலும், அவர் குற்றமிழைக்கவில்லை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு எழுதிய கடிதத்தில் இந்த தகவலை எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. எஃப்.பி.ஐ-யின் இந்த கடிதம் ஹிலாரியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்கிறார் அரசியல் ஆர்வலர்கள்.

சர்ச்சை பேச்சுகள், பாலியல் புகார், முதிர்ச்சியற்ற கொள்கைகள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் மீது சுமத்தப்படுகிறது. இருப்பினும், சில மாகாணங்களில் ஹிலாரியை அவர் முந்தி நிற்பதாகவே அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஒபாமா உள்ளிட்ட நட்சத்திரங்களின் ஆதரவு, அரசியல் அனுபவம் என பல்வேறு சாதகங்கள் ஹிலாரிக்கு இருக்கின்றன. நட்சத்திர ஆதரவு இல்லையென்றாலும் மனம் தளராத ட்ரம்ப், தேர்தல் பரப்புரையில் மனைவி மெலீனா உள்ளிட்ட குடும்பத்தினரை ஈடுபடுத்தி வருகிறார். சாதகமான அம்சங்கள் அதிகம் இருப்பினும் தேர்தல் களத்தில் கடும் நிலவுகிறது என்பதே தற்போதைய நிலை என்கிறார்கள் அமெரிக்க அதிபர் தேர்தலை உற்றுநோக்கி வருபவர்கள்.

அமெரிக்க அதிபராக ஹிலாரி தேர்வு செய்யப்பட்டால், முதல் பெண் அதிபர் என்ற சாதனையை அவர் படைப்பார். அதேநேரம் ட்ரம்ப் வெற்றி பெற்றால், அரசியல் பின்னணி இல்லாமல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நபர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close