[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ஹிலரி அமெரிக்க அதிபராக இந்தியாவில் சிறப்பு பூஜை

special-pooja-for-hillary-clinton-in-india

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிளிண்டன் அறக்கட்டளை சார்பாக தத்தெடுக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அமெரிக்கத் தேர்தலில் ஹிலரி வெற்றி பெற சிறப்புப் பிரார்த்தனை நடத்தினர்.

கடந்த சில மாதங்களாக உலக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதில்குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் மோதுகிறார். கருத்துக்கணிப்பில் இருவருக்கும் இடையே நூலிலை வித்தியாசமே காணப்படுவதால் அமெரிக்காவின் அடுத்த அதிபர் பதவியை அடைய போது யார் என்ற எதிர்பார்ப்பு உலக மக்கள் அனைவரிடமே மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலரி கிளிண்டன் வெற்றி பெற இந்தியாவில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளது ஜபரோலி கிராமம். முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் இந்த கிராமத்தை ஏற்கனவே தத்தெடுத்துள்ளார். கிளிண்டனின் மனைவி ஹிலரி அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு அவருக்கு வெற்றிக் கிடைக்க ஜபரோலி கிராம மக்கள் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தினர். தேர்தலில் ஹிலரி வெற்றி பெற்று தங்களின் கிராமத்துக்கு அமெரிக்க அதிபராக வருவார் எனவும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close