[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

பரப்புரைக் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்

trump-rushed-off-stage-by-security-officers-after-gun-scare-at-nevada-rally

துப்பாக்கியுடன் ஒருவர் புகுந்ததாக கிடைத்த ரகசிய தகவலால், டொனால்டு டிரம்பின் பரப்புரை சிறிது நேரம் தடைபட்டது.

நெவேடா மாகாணம் ரெனோ நகரில் தேர்தல் பரப்புரைக் கூட்டம்‌ ஒன்றில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உரையாற்ற‌ தயாரானார். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் ஒருவர் புகுந்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்‌ததைத்‌ தொடர்ந்து‌, டிரம்பை அவரது பாதுகா‌வலர்கள் அவசர, அவசரமாக ‌பாதுகாப்பான இடத்திற்‌கு அழைத்துச் சென்றனர்.

தொண்டர்களிடையே நின்ற சந்தேகத்திற்கிடமான நபரை காவல்துறையினர் கையில் விலங்கிட்டு அழைத்துச் சென்ற‌னர். சிறிது நேரத்திற்குப் பின்னர் மீண்டும் மேடைக்கு வந்த டொனால்டு‌ டிரம்ப், தமது பரப்புரையைத் தொடர்ந்தார். அவரது பரப்புரைக் கூட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் நுழைந்ததாக கிடைத்த தகவல் வெறும் வதந்தி என வி‌சாரணையில் தெரியவந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close