[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

அமெரிக்க ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு.... முன்கூட்டியே வாக்களிக்கும் முறை..

us-election-2016-early-voting-system

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நாளன்று வாக்களிக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், முன் கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அமெரிக்கா ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு அரங்கேறி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 8-ஆம் தேதி நடக்கவிருகிறது. இதில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இங்கு பேப்பர் வாக்குச்சீட்டு மற்றும் தொடுதிரையில் வாக்களிக்கும் நடைமுறையும் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் குறிப்பிட்ட மாகாணங்களில் வாக்கு சாவடிகளில் முன் கூட்டியே வாக்களித்து வருகின்றனர் அந்நாட்டு குடிமக்கள். நவம்பர் 8- ஆம் தேதி வாக்களிக்க வாய்ப்பில்லாதவர்கள் முன் கூட்டியே வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்யலாம். அக்டோபர் 22- ஆம் தேதி முதலே முன்கூட்டியே வாக்களிக்கும் மையங்கள் செயல்படுகின்றன. மேலும் அக்டோபர் 28- இல் கூடுதலாக 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருமே முன் கூட்டியே வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

முன்கூட்டியே வாக்களிக்கும் முறையில், தற்போது பல தரபட்ட குடிமக்களும் வாக்களித்து வருகின்றனர். தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close