[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் கள நிலவரம்: கருத்துக்கணிப்புகளில் மீண்டும் முன்னிலையில் ஹிலாரி

voters-express-disgust-over-us-politics-in-new-times-cbs-poll

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் ஹிலாரி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.

சி.பி.எஸ் நியூசுடன் இணைந்து நியூயார்க் டைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரிக்கு 45 சதவீதம் ஆதரவும், குடியரசுக் கட்சியின் ட்ரம்பிற்கு 42 சதவீதம் ஆதரவும் கிடைத்துள்ளது. ஹிலாரி அதிபராவதற்கான வாய்ப்பு 86 சதவீதம் இருப்பதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கு 45 சதவீதம் ஆதரவும், ட்ரம்பிற்கு 39 சதவீதம் ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.

ஏபிசி தொலைக்காட்சி மற்றும் வாஷிங்டன் போஸ்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளின்டனுக்கு 47 சதவீதம் ஆதரவும், ட்ரம்பிற்கு 45 சதவீதம் ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னதாக வெளியான கருத்துக்கணிப்புகளில் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனிடையே, ஃப்ளோரிடாவில் ஹிலாரியை ஆதரித்து பேசிய அதிபர் ஒபாமா, ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளை வீணாக்கிவிட வேண்டாம் என அமெரிக்கர்களை கேட்டுக்கொண்டார். அமெரிக்காவை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லும் திறமை ஹிலாரிக்கு மட்டுமே இருப்பதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close