[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

கொடூ‌ர மனம் படைத்தவர் ட்ரம்ப்: ஹிலரி விமர்சனம்

trump-cruel-man-hilary-review

டொனால்டு ட்ரம்ப் கொடூர மனம் படைத்தவர் என ஹிலரி கிளின்டன் விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளின்டன், ப்ளோரிடாவில் நடந்த பரப்புரைக்கூட்டத்தில் பேசிய போது, கடந்த 30 ஆண்டுகளாக ட்ரம்ப் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும், மோசமாக நடத்தியும் வந்துள்ளதாக குற்றம்சாட்டினார். பெண்களை அவர்களின் உருவம் கொண்டு ட்ரம்ப் மதிப்பிடுவதாகக் கூறிய ஹிலரி, இத்தகைய நபர் அதிபராவதை அனுமதிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்கப் பொருளாதாரத்தை உயர்த்துவது குறித்தும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் குறித்தும் விளக்க வேண்டிய கூட்டத்தில் இத்தகைய விசயத்தைப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது வருத்தத்தை தருவதாகவும் அவர் கூறினார். இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் முன்னாள் பிரபஞ்ச அழகி அலிசியா மச்சாடோவும் கலந்து கொண்டு, ட்ரம்பிற்கு அமெரிக்க பெண்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close