[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

மோசுல் நகருக்குள் ஈராக் படைகள் நுழைந்தன: ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டை

iraq-prime-minister-haider-al-abadi-warning-to-is-terrorist

ஈராக் சிறப்புப் படைப்பிரிவினர் மோசுல் நகருக்குள் நுழைந்துள்ளனர். நகரின் கிழக்குப் பகுதி வழியாக அவர்கள் நுழைந்துள்ளதாக ஈராக் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாத மத்தியில் தொடங்கப்ப‌ட்ட மோசுல் மீட்பு நடவடிக்கையில் இது முக்கிய முன்னேற்றமாகும். குக்ஜாலி தொழிற்பேட்டைப் பகுதிக்குள் நுழைந்த படையினர் அரசு தொலைக்காட்சி நிலையத்தை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.

இதனிடையே அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தும் பொருட்டு அவர்களை துப்பாக்கி முனையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நகரின் மத்தியப் பகுதிக்கு அழைத்துச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் அனைவரும் ஈராக் ராணுவத்தினரிடம் சரணடைய வேண்டும் அல்லது அவர்கள் அழித்தொழிக்கப்படுவார்‌கள் என ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close