[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மின்னஞ்சல் தொடர்பான விசாரணையால் பாதிப்பில்லை: ஹிலரி நம்பிக்கை

america-presidential-election-hilary-trust

அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பின் மின்னஞ்சல் தொடர்பான புதிய விசாரணை தகவல் வெளியானதால் தனது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது என ஹிலரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிப‌ர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளி‌ன்டன் ஓஹையோ மாகாணத்தின் கென்டில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரச்னைகளை சமாளிக்கும் பக்குவம் இல்லாத டொனா‌ல்டு ட்ரம்பிற்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதிபர் வேட்பாளர்களுக்கான நேரடி விவாதங்கள் மற்றும் பரப்புரைகளின் போது ட்ரம்ப் நடந்து கொண்ட விதம் போன்றவற்றை சுட்டிக்காட்டிப் பேசிய ஹிலரி, அவரால் முக்கிய விசயங்களில் பொறுமையாக ஆலோசனை செய்து முடிவெடுக்க இயலாது எனவும் குற்றம்சாட்டினார். இத்தகைய நபரிடம் எப்படி நாட்டை ஒப்படைக்க மக்கள் விரும்புவர்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

சில முக்கிய மாகாணங்களில் ட்ரம்பை விட அதிக ஆதரவை ஹிலரி பெற்றுள்ளதாக கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளன. இருப்பினும், தேசிய அளவில் ட்ரம்பை விட இரண்டு புள்ளிகள் மட்டுமே ஹிலரி கூடுதல் ஆதரவைப் பெற்றுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close