[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பில் ஹிலரி முன்னிலை

america-presidential-election

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் டொனால்டு ட்ரம்பை விட ஹிலரி கிளின்டன் இரு புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அதிபர் தேர்தலுக்கான பரப்புரை தொடங்கியது முதல் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டன், டொனால்டு ட்ரம்பை விட கூடுதல் ஆதரவை பெற்றுள்ளது பல கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலமாக தெரிய வந்தன. தேர்தல் நடக்க இரு வார காலமே உள்ள நிலையில் ஏபிசி செய்திகள் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் ஹிலரி கிளின்டனுக்கு 47 சதவீத ஆதரவும், டொனால்டு ட்ரம்பிற்கு 45 சதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.

அதிபர் தேர்தலில் விடுதலைக்கட்சி சார்பில் போட்டியிடும் கேரி ஜான்சனுக்கு நான்கு சதவீதமும், க்ரீன் கட்சி சார்பில் போட்டியிடும் ஜில் ஸ்டெயினுக்கு 2 சதவீதமும் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த வாரத்தில் சுமார் 12 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்த ஹிலரிக்கான ஆதரவு குறைந்துள்ளது இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த வாரத்தை விட தற்போது ட்ரம்ப் ஏழு புள்ளிகள் ஆதரவைக் கூடுதலாகப் பெற்றுள்ளதாகவும், அதே நேரத்தில் ஹிலரிக்கான ஆதரவு மூன்று புள்ளிகள் சரிந்துள்ளதாகவும் இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனிடையே ஹிலரியின் மின்னஞ்சல்கள் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்படுவதாக வெளியான செய்திகள், அவருக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close