[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

பிரிட்டன் பிரதமர் தெரசா மே நவ.6-ம் தேதி இந்தியா வருகை

uk-pm-theresa-may-to-visit-india-from-nov-6

பிரிட்டன் பிரதமர் தெரெசா மே அரசு முறை பயணமாக வரும் நவம்பர் 6ஆம் தேதி இந்தியா வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற பொதுவாக்கெடுப்பை அடுத்து பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பதவி விலகினார். அந்நாட்டின் புதிய பிரதமராக தெரசா மே(60) கடந்த ஜூலை மாதம் பதவி ஏற்றார்.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் தெரெசா மே அரசு முறை பயணமாக வரும் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி இந்தியா வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் பயணமாக இந்தியா வரும் தெரெசா மே , பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுவார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா - பிரிட்டன் தொழில்நுட்ப மாநாட்டை இரு தலைவர்களும் தொடங்கி வைக்க உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close