[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

ட்ரம்புக்கு எதிராக பெண்கள் வாக்களிக்க வேண்டும்: மிச்சேல் ஒபாமா

women-should-vote-against-trump-michelle-obama

அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக பெண்கள் வாக்களிக்க வேண்டும் என ஒபாமா மனைவி மிச்சேல் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயக் கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரம் அங்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ட்ரம்ப் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவர் பெண்களை பற்றி மோசமாக கருத்து தெரிவித்ததாக வெளியான வீடியோவால் சொந்த கட்சியிலேயே அவருக்கு ஆதரவு குறைந்துள்ளது.

இந்த நிலையில் பெண்களை பற்றி அவதூறாகப் பேசிய டொனால்ட் ட்ரம்புக்கு, ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஹாம்ஷயரில் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மிச்சேல், ட்ரம்பின் வார்த்தைகள் அதிர்ச்சியூட்டக்கூடியவையாக உள்ளது. தலைவர்களுக்கு நாகரீகம் அவசியம் அது ட்ரம்ப்க்கு இல்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போன்ற வேட்பாளர்களுக்கு எதிராக பெண்கள் வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close