[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

அமெரிக்க பேராசிரியர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

two-american-professors-share-economics-nobel

பொருளாதாரத் துறையில் ஒப்பந்தங்கள் தொடர்பான கருத்தியலை உருவாக்கிய பெங்க் ஹோல்ம்ஸ்ட்ரோம் மற்றும் ஆலிவர் ஹார்ட் எனும் அமெரிக்க பேராசியர்களுக்கு 2016ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பொருளாதாரத் துறையில் ஒப்பந்தங்கள் போடும்போது ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் ஹோல்ம்ஸ்டாங் மற்றும் ஆலிவர் ஹார்ட் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த சிக்கல்களை எளிதாகப் புரிந்துகொள்ளும்வகையில் அவர்கள் உருவாக்கிய புதிய கருத்தியலுக்காக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அவர்களுக்கு பகிரிந்தளிக்கப்பட உள்ளது.

லண்டனில் பிறந்த ஆலிவர் ஹார்ட், அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பெங்க் ஹோல்ம்ஸ்ட்ரோம் பின்லாந்து நாட்டில் பிறந்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் மசசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசியராக பணியாற்றி வருகிறார்.

மருத்துவம், இயற்பியில், வேதியியல், அமைதி ஆகிய துறைக்களுக்கான நோபல் பரிசுகளைப் பெறுவோரின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கான நோபல் பரிசு போலல்லாமல், பொருளாதாரத்துறைக்கான நோபல் பரிசு கடந்த 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close