[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

ட்ரம்பை நீக்க முடியுமா? குழப்பத்தில் குடியரசுக் கட்சி

donald-trump-is-going-to-war-with-his-republican-critics

வீடியோ ஆதாரங்கள் வெளியாகி நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதால், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபருக்கான போட்டியில் தொடருவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அவரை போட்டியில் இருந்து வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகிறது. ட்ரம்ப் சார்ந்திருக்கும் குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை, அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு, வேட்பாளரை மாற்றுவதற்கு சில வழிமுறைகள் மட்டுமே இருக்கின்றன.

குடியரசுக் கட்சியின் விதி என் 9-இன் படி, அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இறந்துவிட்டாலோ, போட்டியிட மறுத்துவிட்டாலோ வேறொருவரை வேட்பாளராகக் களமிறக்க முடியும். போட்டியில் இருந்து விலகப் போவதில்லை என்று ட்ரம்ப் அறிவித்திருப்பதால், இவ்விரு சாத்தியக்கூறுகளும் இல்லை. அதனால், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 160 தேசியக் குழு உறுப்பினர்களும் கூடி, புதிய வேட்பாளரை அறிவிப்பது ஒன்று மட்டுமே இப்போதைக்கு சாத்தியமான ஒன்று எனக் கூறப்படுகிறது. இப்படியொரு அசாதாரணமான நிலைமை இதற்கு முன் ஏற்பட்டதில்லை. விதி எண் 9, பயன்படுத்தப்பட்டதும் இல்லை.

கடந்த 2005-ம் ஆண்டில் பெண்கள் குறித்து ட்ரம்ப் ஆபாசமாக பேசிய வீடியோவை ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் இப்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ‘அழகான பெண்களிடம் நான் அத்துமீறி நடந்து கொள்வேன். பிரபல தொழிலதிபராக இருப்பதால் எனது அத்துமீறலை பெண்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்’ என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close