[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் விவாதம்: ஹிலரி - ட்ரம்ப் பரஸ்பரம் குற்றச்சாட்டு

us-presidential-debate-hilary-trump-mutual-accusation

அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் மோதிய இரண்டாவது நேரடி விவாத நிகழ்ச்சியில் ஹிலரி கிளிண்டனும் டொனால்ட் ட்ரம்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டினார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8 -ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் போட்டியிடுகின்றனர். அமரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் 2- வது நேரடி விவாதம் இன்று நடைபெற்றது.சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் இருவரும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

விவாதத்தில் எதிர்பார்த்தது போலவே பெண்கள் பற்றி ட்ரம்ப் பேசிய அவதூறு பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.விவாதத்தின் போது கொள்கைகள் தொடர்பான அம்சங்களைவிட ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டுவதிலேயே பெரும்பகுதி நேரம் கழிந்தது. பெண்களைத் தரக்குறைவாகப் பேசியவர், வரிகட்டாமல் ஏமாற்றியவர் என டொனால்ட் ட்ரம்ப் மீது ஹிலரி கிளிண்டன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், அரசு மின்னஞ்சல்களை ஹிலரி அழித்ததாகவும், வெளியுறவு அமைச்சராகத் தோல்வியடைந்ததாகவும் கூறினார். ஏபிசி தொலைக்காட்சியின் மார்த்தா ரடாஸ், சிஎன்என் தொலைக்காட்சியின் ஆண்டர்சன் கூப்பர் ஆகியோர் நெறியாளர்களாகச் செயல்பட்டனர். சிரியா விவகாரம், லிபியாவில் நடந்த யுத்தம், அகதிகள் பிரச்னை போன்றவை குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள்.ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேட்பாளர்களுக்கு 2 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close