[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

சிரியா படைகள் மீது தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும்: அமெரிக்காவிற்கு ரஷ்யா எச்சரிக்கை

russia-warns-it-may-shoot-down-u-s-aircraft-if-they-attack-syrian-forces

சிரியா அரசுப்படையினர் மீது தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. சிரியாவில் உள்ள ரஷ்ய தளங்களை பாதுகாக்கும் பொருட்டு S-200 மற்றும் பக் உள்ளிட்ட ஏவுகணை தடுப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதை அமெரிக்கா கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் இகோர் கோனாஷென்கோ தெரிவித்துள்ளார்.

ஹிமேமிம் மற்றும் டார்டஸ் விமானப்படைத் தளங்களை பயன்படுத்திவரும் ரஷ்ய வீரர்களை பாதுகாக்க வான்வழி தாக்குதல்களை முறியடிக்கும் அதி நவீன அமைப்புகளான S-400 மற்றும் S-300 போன்றவை நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அலெப்போ மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சிரியா அரசுப்படையினருக்கும், ரஷ்யாவிற்கும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல்கள் தொடர்ந்து வரும் காரணத்தால் ரஷ்யாவுடனான பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையையும் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close