[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

அமெரிக்காவை அலர வைத்த ‘மேத்யூ’ புயல்....339 பேர் பலி

mathew-strom-affected-in-america

சுரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் அமரிக்கா, ஹெய்தி, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் அமெரிக்கா மற்றும் ஹெய்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதில் இதுவரை 339 பேர் பலியாகியுள்ளனர்.

‘மேத்யூ’ புயலின் தாக்கத்தால் கனமழை தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம், தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த புயல் தாக்குதலில் புளோரிடா நகரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது எனவே அங்கு பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, மீட்பு மற்றும் அவசர கால குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புயலின் வேகம் கடுமையாக உள்ளதால் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளது. ‘மேத்யூ’ புயல் காற்றினால் மரங்கள் முறிந்து வீடுகள் இடிந்து நாசமடைந்தது. இந்த தாக்குதலுக்கு இதுவரை 339 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close