[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய மாநில ஆட்சியில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் முகிலனை மீட்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் 25ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மிச்செல் ஒபாமாவை கொரில்லாவுடன் ஒப்பிட்ட பள்ளி நிர்வாகி பணி நீக்கம்

poor-gorilla-teacher-s-aide-fired-for-racist-facebook-posts-about-michelle-obama

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை கொரில்லா என முகநூல் பதிவு மூலம் விமர்சித்த பள்ளி ஆசிரியரின் உதவியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியரில் உதவியாளராகப் பணியாற்றியவர் ஜேன் உட் ஆலன். இவர், தனது முகநூல் பதிவில் மிச்செல் ஒபாமாவை கொரில்லா என்று விமர்சித்திருந்தார். மேலும், மிச்செல் ஒபாமாவால் அமெரிக்காவுக்கு அவமானம் என்றும் பதிவிட்டிருந்தார்.
அதேபோல ஆலன் தனது பதிவில், மிச்செல் ஒபாமாவின் உலக சுற்றுலாக்களுக்கு அரசுப் பணத்தை செலவிடுவது குறித்தும் அவர் விமர்ச்சித்திருந்தார். ஆலனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ, இந்த கருத்துக்கு உலக அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தன. இதையடுத்து, இனவெறியுடன் கருத்து பதிவிட்டதாகக் கூறி ஆலனை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close