[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

இந்தியாவை பாகிஸ்தான் பதிலுக்கு மிரட்ட வேண்டும்: முஷாரஃப் ஆவேசம்

pak-s-wrong-policies-reason-for-global-isolation-musharraf-says

நவாஸ் ஷெரீப் தலையிலான அரசின் தவறான கொள்கைகளால் தான் உலக அளவில் பாகிஸ்தான் தனிமைப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் முன்னாள் அதிபர், பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.

தனது ஏபிஎம்எல் கட்சித் தொண்டர்களுடன் தொலைப்பேசி வாயிலாக கலந்துரையாடிய முஷாரப் கூறியதாவது: சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படுவதற்கு நவாஸ் ஷெரீப் அரசு கடைபிடிக்கும் தவறான கொள்கைகளே காரணம் ஆகும். மிரட்டல் விடுக்கும் பணியை இந்தியா சிறப்பாக செய்கிறது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அந்த மிரட்டல்களுக்கு உரிய பதிலடி கொடுக்க முடிவெடுத்தால், விளைவ வேறு மாதிரி இருக்கும். பாகிஸ்தான் ஒன்றும் பூடான் கிடையாது. இதனை இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால், அதற்கு பாகிஸ்தானை குற்றம்சாட்டுவதை இந்தியா வாடிக்கையாக கொண்டுள்ளது. என்றார்.

இதனிடையே அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ‘வாஷிங்டன் கருத்துக்கள் மன்றம்’ என்ற அமைப்பில் பேசும்போது, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது முஷாஃரப், கூறுகையில் “காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்திய தலைவர்கள், பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிவருகின்றனர். அந்த மிரட்டலுக்கு பாகிஸ்தான் தலைவர்கள் பதிலடி கொடுத்திருக்க வேண்டும். நான் பதவியில் இருந்தால், அப்படித்தான் பதிலுக்கு மிரட்டல்விடுத்திருப்பேன்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close