[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி- டிரம்ப் இடையே காரசார விவாதம்

presidential-debate-trump-clinton-open-debate-with-personal-jabs-policy-differences

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இருவரும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட தொடங்கினர். தங்கள் கருத்துக்களையும், திட்டங்களையும் மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் பேசிய இருவரும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான தங்கள் திட்டங்கள் குறித்துப் பேசும் போது ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினர்.

பெரும் தொழில் அதிபர்களுக்கான வரிவிதிப்பை குறைக்கப்போவதாகக் கூறிய ட்ரம்ப், அதன் மூலம் தொழில்துறை வளர்ச்சியடையும் என்றும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதனை மறுத்த ஹிலரி ட்ரம்பின் கொள்கைகள், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவே வழி வகுக்கும் என்று கூறியதோடு, குறைந்த வருவாய்ப்பிரிவினருக்கான வரி விதிப்பை குறைக்கப் போவதாகவும் கூறினார்.

இருவரும் முதல் நேரடி விவாதத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக வெளியான கருத்துக்கணிப்பின்படி ஹிலரி ட்ரம்பை விட 2 புள்ளிகள் கூடுதல் ஆதரவைப் பெற்றுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close