[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

வேற்று கிரகவாசிகளை கண்டறியும் முயற்சி..... சீனாவில் பிரமாண்ட தொலைநோக்கி!

china-s-giant-telescope

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை நிறுவும் பணியை சீனா நிறைவு செய்துள்ளது. வானியல் வல்லுனர்கள் கடந்த 1994 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று சீன அரசிடம் தெரிவித்தனர். இந்த யோசனை தெரிவிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கழித்து கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த ரேடியோ தொலைநோக்கியை தென்மேற்கு சீனாவில் பிங்டாங் மாகாணத்தில் கர்ஸ்ட் பள்ளத்தாக்கில் நிறுவ சீன அரசு முடிவு செய்தது.

முற்றிலும் சீனத் தொழில்நுட்பத்திலான இந்தத் தொலைநோக்கியை உருவாக்கும் திட்டத்திற்காக 180 மில்லியன் அமெரிக்க டாலர்களை சீனா முதலீடு செய்தது. இதற்கான பணிகள் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நடந்து வந்தன. ‌இத்தொலைநோக்கியின் ஆண்டெனா, 30 கால்பந்து மைதானங்களின் பரப்பளவுக்கு இணையானதாகும்.

இந்த ரேடியோ தொலைநோக்கி நட்சத்திரங்கள், கோள்கள் என பிரபஞ்சம் முழுவதும் உள்ள சிக்னல்களை பெற உதவும் என விஞ்ஞாகள் கருது கின்றனர். மேலும், இத்தொலைநோக்கியின் முக்கிய அம்சம் விண்வெளி ஆய்வு மற்றும் வேற்று கிரகவாசிகள் குறித்து அறிவதற்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close