[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

வங்கதேசத்தில் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு நடைபெற்ற வினோத திருமணம்....

bangladesh-zoo-throws-wedding-party-for-lions-with-heart-shaped-meat-cake

வங்கதேசத்தில் வனஉயிரியல் பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு திருமணம் செய்து வைத்து விழா கொண்டாடியுள்ளனர். இந்த விழாவில் சிங்கங்களுக்கு இதய வடிவில் இறைச்சி கேக் வழங்கப்பட்டது.

சிட்டாகாங்க் வனஉயிரியல் பூங்காவிற்கு பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டதாக பூங்கா நிர்வாகி தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற சிங்கங்களின் திருமண வரவேற்பில் 400 விருந்தினர்கள் (பொதுமக்கள்) கலந்து கொண்டனர். இதற்காக தோரணங்கள் மற்றும், பலூன்கள் கட்டப்பட்டு பூங்கா முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

சிட்டாகாங்க் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் ‘நோவா’ பிறந்தது. அது கடந்த 11 ஆண்டுகளாக ஆண் சிங்கம் துணையில்லாமல் வாழ்ந்து வந்தது. எனவே அதற்கு துணையாக பாட்ஷா என்ற ஆண் சிங்கம், ரங்பூர் பூங்காவில் இருந்து அழைத்து வரப்பட்டது. இந்த சிங்கத்தை வரவேற்கும் விதமாகவே திருமண விழா கொண்டாடப்பட்டது. திருமண விழாவில், 10 கிலோ இறைச்சி கேக், சிங்கத் தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், மாட்டிறைச்சி, சிக்கன், முட்டை மற்றும் வருத்த குடல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த தகவலை சிட்டாகாங்க் உயிரியல் பூங்கா நிர்வாகி மோன்ஜுர் மோர்ஷித் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close