[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

நியூயார்க் மன்ஹாட்டன் குண்டுவெடிப்பு : தொடர்புடைய 28வது இளைஞரின் புகைப்படம் வெளியீடு

new-york-police-seek-28-year-old-man-in-connection-with-manhattan-bombing

அமெரிக்காவின் நியூயார்க்கில் முக்கியத்துவம் வாய்ந்த மன்ஹாட்டன் பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 29 பேர் காயமடைந்தனர். குண்டு வெடித்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த கட்டடங்களில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியில் அழைத்துச் சென்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் வந்திருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பை திட்டமிட்டு நடத்தியிருப்பது தெரிகிறது என்றும், ஆனால் தீவிரவாதக் குழுக்களுக்கு இதில் தொடர்பு இருப்பதற்கு சான்று இல்லை என்றும் நியூயார்க்கின் மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஆப்கன் வம்சாவளியைச் சேர்ந்த அகமத் கான் ரஹமிக்கு தொடர்ப்பு இருபபதாக கூறி, நியூயார்க் போலீசார் அவரது புகைப்படத்தை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close