[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

இரு நாட்களில் வழக்கமான பணிக்கு திரும்புவேன்: ஹிலரி கிளின்டன்

hillary-clinton-i-didn-t-think-pneumonia-was-big-deal

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஹிலரி கிளின்டன் தற்போது நலமுடன் இருப்பதாகவும்‌, இரு நாள்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்ளத் தயாராகி விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ஹிலரி, இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு நிகழ்வின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், ஆனால் மயங்கிவிடவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நிமோனியாவால் பாதிக்கப்பட்டது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என கருதியதால் தான் யாரிடமும் இது குறித்து தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் 10 நாள்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும், அதனை ஏற்காததாலேயே தனக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஹிலரி தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலை தேற வாழ்த்தியவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஹிலரி கிளின்டன், உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறரைப் போலவே தானும் விரைவில் வழக்கமான பணிக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நியூயார்க்கில் ஞாயிறன்று நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு நிகழ்வில் பங்கேற்ற ஹிலரி திடீரென நிலை தடுமாறினார். அதனை அடுத்து அவரது மகள் செல்சியாவின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டதாகவும், உடல்நிலை தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close