JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
மாவட்டம் 14 Jun, 2016 06:33 PM

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு: குழந்தையுடன் உறவினர்கள் போராட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில், பிரசவத்தின் போது பெண் உயிரிழந்தார்.

மருத்துவர்களின் அலட்சியமே அதற்கு காரணம் எனக்கூறி பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையுடன் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் தொடர்வதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மருத்துவமனையை கண்டித்து துர்காவின் உறவினர்களும், பொதுமக்களும் நடத்திய மறியலால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களிடம், வட்டாட்சியர், குடியாத்தம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலரும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்தது.

பள்ளி, கல்லூரி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் குடியாத்தம் அரசு மருத்துவமனை முன் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போக்குவரத்தை சரிசெய்யும் வகையில், மறியலில் ஈடுபட்டிருந்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றனர்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads