JUST IN
 • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 31 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்: காவல்துறை
 • BREAKING-NEWS சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது
 • BREAKING-NEWS பருத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தால் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைக்கண்ணு
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
 • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
 • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
 • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
 • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
தமிழ்நாடு 27 Aug, 2016 08:01 AM

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: விரைந்து முடிக்க சிபிஐ திட்டம்

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விரைந்து முடிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏதுவாக இவ்வழக்கை இரண்டாகப் பிரித்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் விசாரணை காலதாமதமாவதற்கு நீதிபதி ஒ.பி சைனி அதிருப்தி தெரிவித்தது சிபிஐக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. 10 ஆண்டுகளாக வழக்கு நீடித்து வரும் நிலையில் விசாரணை இன்னும் இறுதிக் கட்டத்தை நெருங்கவில்லை. வழக்கில் தொடர்புடைய மலேசியாவை சேர்ந்த அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷ்ல் ஆகியோருக்கு அழைப்பாணை வழங்குவதில் நீடிக்கும் சிக்கலே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அரசியல் செல்வாக்கு உடையவர்கள் வழக்கில் சிக்கும்போது சிபிஐக்கே சிக்கல்களும் நெருக்கடிகளும் ஏற்படுவதாக தணிக்கையாளர்கள் கூறுகின்றனர். காலதாமதம் தொடரும்போது ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் அழித்துவிடக்கூடிய நிலை இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

இந்த நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கை இரண்டாக பிரித்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி உள்ளிட்டவர்கள் மீதான வழக்கை தனியாகவும் வெளிநாட்டில் இருக்கும் அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷ்ல் ஆகியோர் மீதான வழக்கை தனியாகவும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்திருக்கிறது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும்போது நீதிபதி ஒ.பி சைனியிடம் இதற்கான அனுமதியை பெற சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கை இரண்டாக பிரிக்க நீதிபதி சைனி அனுமதி வழங்குவார் என்றும் இதன் மூலம் மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு விரைவில் முடிந்து தீர்ப்பு வரும் எனவும் சிபிஐ அதிகாரிகள் கூறியள்ளனர். அதே நேரத்தில் வெளிநாட்டில் உள்ளவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசிய தொழில் அதிபர் அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேக்சிஸ் உரிமையாளர் அனந்தகிருஷ்ணனுடன் தயாநிதி மாறன் கூட்டுச்சதியில் ஈடுபட்டு, ஏர்செல் பங்குகளை விற்குமாறு சிவசங்கரனை நிர்பந்தித்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்குக் கைமாறாக மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் நெட்வொர்க்கில் மேக்சிஸ் நிறுவனம் 742 கோடியே 58 லட்சம் ரூபாய் அளவிற்கு முதலீடு செய்தது என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது. மாறன் சகோதரர்களுடன், கலாநிதி மாறனின்‌ மனைவி காவேரி கலாநிதியின் பெயரும் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads