[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

heavy-rains-across-tamil-nadu

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருப்பத்தூா், தேவகோட்டை, சிங்கம்புணரி, காளையார்கோவில் போன்ற இடங்களிலும் பரவலாக கனமழை பெய்தது. காற்றுடன் பெய்த கன மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார கிராமங்களில் சீரான சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.‌ கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டிய நிலையில் இந்த மழை ஆறுதல் அளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லாம்பள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் மழை பெய்தது.

இதேபோன்று நாமக்கல்‌ மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close