[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இயல்பை விட 7 மி.மீ மழை குறைவு .... வானிலை மையம் தகவல்

tamil-nadu-rain-details

தமிழகத்தில் இயல்பை விட 7 மி.மீ மழை குறைவு தென்மேற்கு பருவமழை தொடங்கி அதாவது கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நாடு முழுவதும் இயல்பை விட 2 சதவிகிதம் குறைவாகவே மழை பெய்துள்ளது என்கிறது வானிலை மையத்தின் பருவ மழை தொடர்பான அறிக்கை. இதன் படி பார்த்தால் வழக்கமாக இந்த கால கட்டத்தில் நாடு முழுவதும் 66. 35 சென்டிமீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 64.75 சென்டிமீட்டர் மழையே பெய்திருக்கிறது.

குறிப்பாக தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி தற்போது வரை 45.38 சென்டிமீட்டர் மழையே பெய்துள்ளது. இயல்பை விட இது 13 சதவிகிதம் குறைவு.

கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவிலும் இயல்பை விட 16 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது. ஆனால் மத்திய இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இயல்பை விட 7 சதவிகிதம் கூடுதலாகவும், வடமேற்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 5 சதவிகிதம் கூடுதலாகவும் மழை பொழிவு காணப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close