[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

need-measures-to-control-dengue-fever

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரத்தில் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், வைரஸ் காயச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சல் இல்லை என்று அரசு கூறினாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பேர் டெங்குவால் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், காய்ச்சலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து சட்டசபைக்கு செல்லும்போது பிரச்னை எழுப்பப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close