[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க அரசின் அனுமதி பெறவேண்டும்: தமிழக அரசு

govt-permission-must-to-investigate-corruption-complaints-against-govt-officers-tn-govt-order

அகில இந்தியப் பணிகள் கீழ் பணிபுரியும் உயரதிகாரிகள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்க‌ள் மீதான லஞ்சப் புகாரையும் விசாரணை செய்ய தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நேற்று பிறப்பித்துள்ள அரசாணையில், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமல்லாமல், தமிழக அரசின் எந்த ஒரு ஊழியர் மீதான லஞ்ச புகாரிலும் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்த அரசின் அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் வகையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு தொடர்பான இரு அரசாணைகளை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். தமிழக அரசு இதுதொடர்பாக புதிய அரசாணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close