[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

வேட்பாளர்களின் சட்டமன்ற தேர்தல் செலவு கணக்கு வெளியீடு: ஜெயலலிதா ரூ.24.55 லட்சம் செலவு

candidate-election-expenditure-released

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

‌அதன்படி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 24 லட்சத்து 55,651 ரூபாய் செலவழித்துள்ளார்.

திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி 25 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். திமுக பொருளாளரும்,‌ சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 25 லட்சத்து 1000 ரூபாய் செலவு செய்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த 16 லட்சத்து 70,090 ரூபாய் செலவழித்துள்ளார். காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 15 லட்சத்து 60,000 ரூபாயும், பென்னாகரம் தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் 19 லட்ச ரூபாயும் செலவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close