[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கல்பனா சாவ்லா விருது - ஜெயந்தி; அப்துல் கலாம் விருது - விஞ்ஞானி ப.சண்முகம்; விருதுகளை வழங்கினார் முதல்வர்

jayalalaithaa-present-award

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்தர தின விழா நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா விருதுகள் வழங்கி கவுரவித்தார்

அப்துல் கலாம் விருதை மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி ப.சண்முகத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி தேர்வானார். சிறந்த மருத்துவர் விருது சென்னையை சேர்ந்த ராஜா கண்ணனுக்கும் சிறந்த சமூகப் பணியாளர் விருது முகமது ரஃபிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த மாநகராட்சிக்கான விருதுக்கு திண்டுக்கல் மாநகரா‌ட்சி தேர்வானது. சிறந்த நகராட்சிக்கான விருதுகளில் முதலிடத்தை பட்டுக்கோட்டையும் 2வது இடத்தை பெரம்பலூரும் 3வது இடத்தை ராமநாதபுரமும் பெற்றன.

சிறந்த பேரூராட்சிக்கான விருதை பரமத்தி வேலூர் பெற்றது. 2வது இடத்தை சின்ன சேலமும் 3வது இடத்தை பெரிய நாயக்கன்பாளையமும் பெற்றன. முதலமைச்சருக்கான மாநில இளைஞர் விருதுகள் பெண்கள் பிரிவில் மாஷா நசீம், அபர்ணா ஆகியோருக்கும் ஆண்கள் பிரிவில் ரூபன் சந்தோஷ், முகமது ரஃபீக் மற்றும் சரவணகுமார் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. கும்பகோணத்தில் மகாமகம் விழாவை சிறப்பாக நடத்திக் காட்டிய தஞ்சை மாவட்ட முன்னாள் ஆட்சியரும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநருமான சுப்பையனுக்கு நல் ஆளுமைக்கான முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close