[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

1லி பால் 25 ரூபாய்க்கு வழங்கும் திட்டம்: அமைச்சர் சண்முகநாதன் உறுதி

1-litre-milk-rs-25-minister-promises

ஒரு லிட்டர் பால் 25 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் புதிதாக 17 மாவட்டங்களில் அதிநவீன பாலகங்கள் அமைக்க 8.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

அமைச்சரின் பதிலுரைக்குப் பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்‌, பால் லிட்டர் 25 ரூபாய்க்கு விற்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். உற்பத்தியாகும் மொத்த பாலையும் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்யக்கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்த ஸ்டாலின், தமிழக அரசு அவர்களை அழைத்துப் பேசி நல்ல தீர்வு காணவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சண்முகநாதன், கடந்த முறை அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டதாகவும், அதைப் போலவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும் அமல்படுத்தப்படும் என்றும் கூறினார். தனியார் நிறுவனங்களுக்கு தரப்படும் தரமற்ற பாலை ஆவின் நிர்வாகம் ஒருபோதும் கொள்முதல் செய்யாது என்றும் அமைச்சர் சண்முகநாதன் அறிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close