[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

tn-cm-jayalalithaa-urges-pm-modi-to-intervene-on-tn-fishermen-issue

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்பாவி மீனவர்கள் மீது இலங்கை படையினர் அத்துமீறுவது தொடர்வதாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது 2 படகுகளையும் கடந்த 30-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும், அவர்களது வாழ்வாதாரமான படகுகள் விடுவிக்கப்படவில்லை என முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்க வழிவகுத்த ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானவை என்றும், அப்பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமை விரைவில் மீட்டுத்தரப்படும் என நம்புவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறலைத் தடுப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் நேரடியாகத் தலையிட்டு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்கள் 15 பேர் மற்றும் அவர்களது 69 படகுகளையும் விரைந்து மீட்க வெளியுறவு அமைச்சகத்தை அறிவுறுத்த வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close